Monday, 17 February 2014

தியானத்திற்கும்(Meditation), ஒர்மைக்கும் (Concentration) உள்ள வேறுபாடு என்ன?


மனம் ஒரு பொருளை நினைக்கிறது என்றால், மனம் அந்த பொருளின் வடிவத்தை எடுக்கிறது என்று பொருள். இந்த நிகழ்ச்சி தியானத்திலும் நடக்கிறது ஒர்மையிலும் நடக்கிறது.

ஒர்மை என்றால் என்ன?
மனதை ஓரு குறிபிட்ட வடிவத்தில் நிலைக்க செய்யும் முயற்சி ஒர்மை பயிற்சி, தியானமும் ஒரு வகையான ஒர்மை பயிற்சியே.

தியானம் என்றால் என்ன?
மனதை அதன் பிரப்பிடத்திலயே ஒடுக்கும் பயிற்சி தியானம் எனப்படும்.

மனம் என்பது ஒரு வகையான அலை என்பது அனைவர்க்கும் தெரியும், அலையின் பிறப்பிடம் நிலையாகத்தான் இருக்க வேண்டும். அதாவது எந்த அலையும் இல்லாத நிலை. அந்த நிலையான ஒரு போறுள் சுத்தவெளியே அன்றி வேரேதும்யில்லை.

ஒர்மை பயிற்சி சுத்தவெளியை நோக்கியிருந்தால் அதை தியானம் என்று கொள்ளலாம்.

சுத்தவெளியில் (SPACE) லயித்து அதுவாகவே மாறிவிட்டால் அந்த நிலையை சமாதி (சமம் + ஆதி) என்று கொள்ளலாம், இதுவே தியானத்தின் முழுமை நிலை

மகரிஷியின் தியான முறையில், மனதை முதலில் ஆக்கினையில் வைத்து பழகுகிறோம். ஆக்கினை தவத்தில், மனம் உயிரிலிருந்து எழும் நுண்ணிய அலைகளை நெற்றியின் புருவமயத்தில் கவனிக்கிறது. இதுவரை ஐம்புலன்கள் வழியே சுற்றி திரிந்த மனம் இங்கு ஒரு புலனாக(தொடு உணர்வு) ஒடுங்குகிறது

பிறகு துரிய தவத்தில் மனம் உயிரை கவனித்து உயிராகவே மாறுகிறது, இங்கு மனம் என்ற நிலையை தாண்டி உள்ளே சென்று உயிராக ஒடுங்குகிறது

உயிரிலிருந்து எழும் ஜீவகாந்த அலை உடல் முழுவதும் சுழன்று கொண்டு இருக்கிறது, அதில் ஒரு பகுதி மூளை செல்களால் மன அலைகளாக மாற்றப்படுகிறது. துரியத்தில் மன அலைகள் மூளை செல்களையே கவனிப்பதால் மன அலைகளாக மாறி மூளையை விட்டு வெளியே செல்லும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆகையால் துரியத்தில் மனம் என்ற படர்கை நிலையை விட்டு உயிராகவே நிற்கிறது.

பிறகு துரியாதித தவத்தில் மனம் சுத்தவெளியில் லயித்து சமாதி என்ற நிலையை அடைந்து தியானம் முழுமை பெறுகிறது

No comments:

Post a Comment